/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/cute-ponnu.jpg)
குக் வித்கோமாளி நிகழ்ச்சி மூலம்பிரபலமான அஸ்வின், இயக்குநர் ஹரிஹரன் இயக்கும் ‘என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளார். இப்படத்தில் அவந்திகா, தேஜஸ்வினி இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். குக் வித் கோமாளி புகழ், டெல்லி கணேஷ், சுபா பஞ்சு ஆகியோர் படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். விவேக் - மெர்வின் இசையமைக்க, இப்படத்தை ட்ரெண்ட்ஸ் ஆர்ட் நிறுவனம் தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகளை முடித்துள்ள படக்குழு, இறுதிக்கட்ட பணியில்தீவிரம் காட்டி வருகிறது.
சமீபத்தில் வெளியான படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது படத்தின் முதல் பாடலான"க்யூட் பொண்ணு" என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. தெருக்குரல் அறிவு வரிகளில் அனிருத் மற்றும் விவேக் சிவா இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)